ஆறறிவுக்குக் கல்வி ஏன்?

பொதுவாக, மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றி பெரிய அளவில் கவலையும் பயமும் அடைகிறார்கள்.  சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவது, உடல்நலம் கெட்டுப்போவது, பூமி வெப்பமாதல், உலகமயமாக்கல், கார்ப்பரேட் கலாச்சாரம், பண்பாடு மற்றும் கலாச்சார சீர்கோடு, கல்விமுறை, வேலைவாய்ப்பு, அரசியல், ஊழல், இலஞ்சம், பூச்சிக்கொல்லி என எல்லாவற்றையும் பற்றி ஒருவித பயமும் அவற்றைப் பற்றி நினைத்து கவலை கொள்வதும் … மேலும் வாசிக்க

இலட்சியங்கள்

என் நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும்போது வாழ்க்கையின் ஒரு உண்மையைச் சொன்னார். “ஒரு பாலைவனத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பல மைல்கள் நடந்த களைப்பு. இப்போது மனம் கேட்பது இரண்டு விஷயங்களை மட்டுமே அமர்ந்து இளைப்பாற நிழல் மற்றும் தாகம் தீர்க்க தண்ணீர். அந்தக் கொடும் பாலைவனத்தில் அந்த நேரத்தில் அது இரண்டுமே கிடைக்கிறது. இனி இந்தப் பயணம் போதும் … மேலும் வாசிக்க

கற்பித்தவை vs கற்றவை

(இந்தக் கட்டுரை குழந்தைகளுக்கான கட்டுரை. ஆனால், கட்டாயம் பெரியவர்களுக்குக் கூட புரியப் போவதில்லை என்பது தான் வருத்தமான விஷயமாகும். ஆம், துரதிருஷ்டவசமாக மனிதர்களில் ஓரளவு சுயமாக சிந்திக்கும் திறனை மிகக் குறைந்தபட்சமாக 30 வயதில் தான் பெறுகிறார்கள். அதுவரை பெற்றவர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள், வியாபாரிகள், ஊடகங்கள் என்று தங்கள் அறிவை எவ்வளவு பொழிய வேண்டுமோ அவ்வளவையும் … மேலும் வாசிக்க

விருப்பும் வெறுப்பும்

தனிமையும் தனித்திருத்தலும்… என் நண்பர் ஒரு பத்திரிக்கையில் இருந்த ஒரு செய்தியைப் படித்து தனியாக உட்கார்ந்து சிரித்தவர், இதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தன் அலைபேசியை நோண்டியவருக்கு வெகு நேரம் யாரும் பிடிபடாமல், தேடிக்கொண்டே இருந்தவர், பின் சற்றென்று என் நினைவு வர, நீண்ட நாட்கள் என்னோடு தொடர்பில் இல்லாததால் என் பெயரையும் மறந்துவிட்டார். … மேலும் வாசிக்க

சும்மா

எண்ணற்ற அர்த்தமில்லாத வார்த்தைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. அதற்கு ஏன் அர்த்தம் கொள்ள வேண்டும்? அதுபாட்டுக்கு சும்மா இருந்துட்டு போட்டுமே. நிறைய நண்பர்கள் எப்படி சம்பாதிக்கலாம்? என்ன செய்யலாம்? எப்படி வாழலாம் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நான் இங்கே சும்மா இருப்பதற்கான வழிகளை மட்டுமே தேடிக் கொண்டிருக்கிறேன். சும்மா இருப்பது அவ்வளவு கஷ்டமான செயலா? … மேலும் வாசிக்க

மூக்குப் பீ கல்வி

இதுவரை ஒரு நான்கு பேர் என்னை அழைத்து பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த தங்கள் பிள்ளைகளை அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்று கேட்கிறார்கள். நான் என்ன பெரிய கல்வி ஆலோசகனா என்ன? மனிதனுக்கு இந்தக் கல்வியே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏன் உங்கள் பிள்ளைக்கு அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது கூட … மேலும் வாசிக்க

One Stop solution

நான் ஒரு மனித உயிரியாக வாழ்ந்ததில் என் குழந்தைப் பருவத்தை மட்டுமே எனக்குப் பிடிக்கிறது. நான் உணராத, அறியாத அந்த பருவத்தை என் அம்மா சொல்லித் தான் எனக்குத் தெரிந்தது. எனக்கு பிறந்தவுடன் என் அம்மாவின் மார்பில் பால் குடிக்க தெரியவில்லை. அவர் தான் தூக்கி தன் மார்பில் என் வாயை வைத்து குடிக்க வைத்திருக்கிறார். … மேலும் வாசிக்க

65

(இதய பலகீனமுள்ளவர்கள், சைவம் சாப்பிடுபவர்கள் தயவுசெய்து இதை படிக்க வேண்டாம். ப்ளீஸ்…..) நீண்ட நாட்களுக்குப் பின் அந்த நண்பனை சந்தித்தேன். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என்னை அவன் பேசவே விடவில்லை. அவன் வீட்டு பிரச்சனைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். இடையே தான் கண்ட கனவைப் பற்றி ஒரு கதையைச் சொன்னான். ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டன் … மேலும் வாசிக்க

உடுக்கை இழந்த கல்வி

(இது படிக்கும் மாணவர்களுக்கான சிறப்பு கட்டுரை மற்றும் ஒரு நீண்ட கட்டுரை. தயவுசெய்து பெரியவர்கள், பெற்றோர்கள் இதை படிக்காதீர்கள். கட்டாயம் இது உங்களுக்குப் புரியப்போவதில்லை. அப்படியே புரிந்தாலும் தேவையில்லாத மன உளச்சலுக்கு ஆளாக வேண்டாம். மீறி படித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.) முதலில் இரண்டு கேள்விகள். ஒன்றுக்கு 2 மதிப்பெண், மற்றொன்றுக்கு 5 மதிப்பெண். அதனைப் பற்றி … மேலும் வாசிக்க

நான் எவ்வளவு அழகு?

(தயவுசெய்து வயது வந்தவர்களுக்கு மட்டுமே என்று தான் இந்த கட்டுரைக்கு முன் எழுத வேண்டும். இப்படி போடுவதால் என் வட்டத்திலுள்ள சில சிறுவர்கள் எப்படியும் இதை படிக்க தான் போகிறார்கள். இப்போதுள்ள காலகட்டத்தில் யாருக்கு எது தெரியாமல் இருக்கிறது? தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டத்தின் நுனியில் அல்லவா நின்றுகொண்டிருக்கிறோம்?) “அந்த பிரதிபலிப்பின் முன் நிர்வாணமாக நின்று என்னை இரசிக்கிறேன் … மேலும் வாசிக்க